கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் ஓணம் திருவிழா வரும் 14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடக்கிறது. 1 ஆம் நாள் திருவிழாவான 14ஆம் தேதி உத்திராடம் நட்சத்திரத்தையொட்டி சிவப்பு நிற பட்டும், 15ஆம் தேதி திருவோணம் நட்சத்திரத்தையொட்டி கேரள பாரம்பரிய வெண் பட்டும், 16ஆம் தேதி அவிட்டம் நட்சத்திரத்தையொட்டி சிவப்பு நிற பட்டும் அம்மனுக்கு அணிவித்து சிறப்பு வழிபாடு நடக்க இருக்கிறது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.