ஒருநாள் கிரிக்கெட் போட்டி, சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணியினர் நேற்று ஆஸ்திரலியாவுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளிலும், 5 சர்வதேச டி20 போட்டிகளிலும் பங்கேற்கிறது. முதலில் ஒருநாள் போட்டிகளும், அதனை தொடர்ந்து டி20 போட்டிகளும் நடைபெற உள்ளன.
வரும் 19-ம் தேதி ஒருநாள் போட்டித் தொடர் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் நேற்று டெல்லி விமான நிலையத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டனர்.விமான நிலையத்துக்குள் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் நுழையும்போது அங்கு கூடியிருந்த ரசிகர்கள் உற்சாகக் குரல் எழுப்பி வரவேற்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.