Home மாநில செய்திகள் திருச்செந்தூர் கோயில் கட்டண உயர்வு குறித்து ஜூலை 21 வரை ஆட்சேபனை தெரிவிக்கலாம்: உயர் நீதிமன்ற...

திருச்செந்தூர் கோயில் கட்டண உயர்வு குறித்து ஜூலை 21 வரை ஆட்சேபனை தெரிவிக்கலாம்: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

0

திருச்​செந்​தூர் கோயில் தரிசன கட்டண உயர்வு தொடர்பாக பொது​மக்​கள் ஜூலை 21 வரை ஆட்​சேபனை​களை தெரிவிக்​கலாம் என உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.

தூத்​துக்​குடி மாவட்​டம் திருச்​செந்​தூரை சேர்ந்த ராம்​கு​மார் ஆதித்தன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​: இந்து சமய அறநிலை​யத் துறை​யின் கட்​டுப்​பாட்​டில் உள்ள கோயில்​களில் தரிசனக் கட்​ட​ணம், சிறப்பு பூஜை கட்​ட​ணம் உள்​ளிட்​டவை கோயில் தக்​கார் அல்​லது அறங்​காவலர் குழு தீர்​மானத்​தின் அடிப்​படை​யில் பொது​மக்​களிடம் கருத்​துக்​கேட்டு முடிவு செய்​யப்​படும்.

இந்த நடை​முறை திருச்​செந்​தூர் கோயில் தரிசனக் கட்டண உயர்வு தொடர்​பான பொது​மக்​கள் கருத்​துக்​கேட்பு கூட்​டம் நடத்த அறி​விப்பு வெளி​யிட்​ட​தில் பின்​பற்​றப்​பட​வில்​லை. பெரிய அளவில் விளம்​பரப்​படுத்த​வில்​லை. இதனால் பொது​மக்​கள் கருத்​துகளை தெரிவிக்க போது​மான வாய்ப்பு கிடைக்​காத நிலை உள்​ளது.

எனவே, திருச்​செந்​தூர் கோயி​லில் தரிசனக் கட்​ட​ணம், பூஜை கட்டண உயர்வு அறி​விப்பை ரத்து செய்​ய​வும், அதை செயல்​படுத்த இடைக்​காலத் தடை​யும் விதிக்க வேண்​டும். மேலும், கோயில் தக்​கார் செயல்​பாட்​டுக்கு தடை விதித்​து, கோயி​லில் அறங்​காவலர் குழு அமைத்த பின்​னரே கட்டண உயர்வு தொடர்பாக முடி​வெடுக்​க​வும் உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனுவில் கூறப்​பட்​டிருந்​தது.

இந்த மனு, நீதிப​தி​கள் கார்த்​தி​கேயன், சக்​திவேல் அமர்​வில் விசாரணைக்கு வந்​தது. அரசுத் தரப்பில், கட்டண உயர்வு தொடர்பாக மனு​தா​ரர் தனது ஆட்​சேபனையை பதிவு செய்​துள்​ளார். அவர் ஜூன் 25-ம் தேதி அனுப்​பிய ஆட்​சேபனை 27-ம் தேதி கிடைத்​தது. மறு​நாள் வழக்கு தொடர்ந்​துள்​ளார் எனக் கூறப்பட்டது.

பின்​னர் நீதிப​தி​கள், கோயில் தரிசன கட்டண உயர்வு தொடர்பான அறி​விப்பை அறநிலையத் துறை​யின் அதிகாரப்பூர்வ வலை​தளத்​தில் வெளியிட வேண்​டும். ஆட்சேபனை​களை தெரிவிக்க இன்று (ஜூலை 7) கடைசி நாள் என்​பதை ஜூலை 21 வரை நீட்​டிக்கப்​படு​கிறது என உத்தரவிட்டனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version