Home தேசிய செய்திகள் 23 வயதுக்கு கீழ் மதுபானம் இல்லை: கேரள பார்களுக்கு புதிய கட்டுப்பாடு

23 வயதுக்கு கீழ் மதுபானம் இல்லை: கேரள பார்களுக்கு புதிய கட்டுப்பாடு

0

கேரளாவில் 23 வயது பூர்த்​தி​யடை​யாத நபர்களுக்கு மதுபானம் விநியோகிப்​ப​தற்​குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாடிக்​கை​யாளர்​களின் வயதை உறுதி செய்ய ஆதார் உள்​ளிட்ட அரசு அடை​யாளச் சான்​றுகளைக் கட்டாயம் பரி சோதிக்க வேண்​டும் என்று மாநில கலால் துறை பார்​களுக்கு அதிரடி உத்​தர​விட்​டுள்​ளது.

வயது குறைவாகத் தோன்​றும் வாடிக்​கை​யாளர்​களுக்கு மது வழங்​கும் முன் ஆதார் அல்​லது வயதை உறுதிப்​படுத்​தும் வேறு அடை​யாள ஆவணங்​களைச் சரிபார்க்க வேண்​டும், விதியை மீறும் பார்​கள் மீது கடும் நட​வடிக்கை எடுக்​கப்​படும் என்று கலால்துறை அமைச்​சர் எம். லிஜு எச்​சரித்​துள்ளார்.

கொச்சி நெடும்​பாசேரி​யில் மினி கூப்​பர் காரை மோதி உயி​ரிழப்பு ஏற்​படுத்​திய 19 வயது இளைஞர் சுஹைல் சஜீவுக்கு, வயதுச் சான்று எது​வுமின்றி மது விநியோகிக்​கப்​பட்​டதையடுத்து, 23 வயதுக்கு உட்​பட்​டோருக்கு மதுபானம் வழங்​கும் பார்​களின் லைசென்ஸை ரத்து செய்​ய​ உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு புதிய மதுபானக் கொள்கையை உருவாக்கி வருவதாகவும், கேரள உயர் நீதி மன்றத்திடம் தெரிவித்தபடி, நவம்பர் மாதத்தில் புதிய கொள்கை அறிவிக்கப்படும் என்​றும் அமைச்​சர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version