டெஸ்ட் அணி​யில் இருந்து நிதிஷ் குமார் ரெட்டி விடு​விப்​பு

0
18

தென் ஆப்​பிரிக்க அணிக்கு எதி​ரான 2 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடருக்​கான இந்​திய அணி​யில் ஆல் ரவுண்​ட​ரான நிதிஷ் குமார் ரெட்டி சேர்க்​கப்​பட்​டிருந்​தார். முதல் டெஸ்ட் போட்டி கொல்​கத்​தா​வில் நாளை தொடங்க உள்ள நிலை​யில் இந்​திய அணி​யில் இருந்து நிதிஷ் குமார் ரெட்டி விடுக்​கப்​பட்​டுள்​ளார்.

அவர், இந்​தியா ‘ஏ’ அணி​யுடன் இணைந்​துள்​ளார். இந்​தியா ‘ஏ’, தென் ஆப்​பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதி​ராக ஒரு​நாள் போட்டி தொடரில் விளை​யாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி ராஜ்கோட்​டில் இன்று நடை​பெறுகிறது. இந்த ஆட்​டத்​தில் நிதிஷ் குமார் ரெட்டி களமிறங்கக்​கூடும் என எதிர்பார்க்​கப்​படு​கிறது.

தென் ஆப்​பிரிக்க அணிக்கு எதி​ரான முதல் டெஸ்ட் போட்​டி​யில் துருவ் ஜூரெல் களமிறக்​கப்​படு​வார் என இந்​திய அணி​யின் பேட்​டிங் பயிற்​சி​யாள​ரான டென் டஸ்​ஷேட் தெரி​வித்​துள்​ளார். ரிஷப் பந்த் அணிக்கு திரும்பி உள்ள நிலை​யில் துருவ் ஜூரெல் பேட்​ஸ்​மே​னாக மட்​டும் இடம்​பெறு​வார். இதனால் நிதிஷ் குமார் ரெட்டி வெளியே அமர​வைக்​கப்​படு​வார்.

இதன் காரண​மாகவே அவரை, இந்​தியா ‘ஏ’ அணி​யுடன் இணைந்து விளை​யாடு​மாறு கூறப்​பட்​டுள்​ளது. இது தென் ஆப்​பிரிக்க அணிக்கு எதி​ரான ஒரு​நாள் போட்டி மற்​றும் டி 20 போட்​டிகளுக்கு தயா​ராக அவருக்​கு உதவி​யாக இருக்​கக்​கூடும்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here