ஐக்கிய ஜனதா தள தலைவராக நிதிஷ் போட்டியின்றி தேர்வு

0
11

ஐக்கிய ஜனதா தளத்தின் (ஜேடியு) தேசிய தலைவராக பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் போட்டியின்றி நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜேடியு மூத்த தலைவர் அனில் ஹெக்டே டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 22ம் தேதி முடிவடைந்தது. 23ம் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு செவ்வாய்க்கிழமை (நேற்று) காலை 11 மணியுடன் முடிவடைந்தது.

இந்நிலையில், நிதிஷ் குமார் மட்டுமே மனு தாக்கல் செய்திருந்ததால் அவர் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இவ்வாறு அவர் தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜேடியு செயல் தலைவர் சஞ்சய் ஜா, நிதிஷ் குமாரின் தலைமையைப் பாராட்டியதுடன், அவரது இடைவிடாத உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் தான் கட்சி இன்று இந்த நிலையை எட்டியுள்ளதாகக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here