நித்திரவிளை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதரன் (46). அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் (4-ம் தேதி) மாலை நித்திரவிளை டாஸ்மாக் கடைக்கு தனது ஸ்கூட்டரில் சென்று மதுபானம் வாங்கி விட்டு திரும்பி வந்து பார்த்தபோது ஸ்கூட்டரை காணவில்லை. இது குறித்து அவர் நித்திரவிளை போலீசில் புகார் செய்தார்.
இந்த நிலையில் திருட்டு போன ஸ்கூட்டரில் நேற்று (5-ம் தேதி) மதியம் 1 மணி அளவில் நித்திரவிளை டாஸ்மாக் கடைக்கு அதே பைக்கில் மதுபானம் வாங்க ஒருவர் வந்துள்ளார். ஸ்ரீதரன் மற்றும் நண்பர்கள் அவரை பிடித்து வைத்து நித்திரவிளை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் காவல் நிலையத்தில் கொண்டு சென்று விசாரணை செய்தனர். இதில் அவர் பூத்துறை காருண்யாபுரம் பகுதி சேர்ந்த சுனில் (42) மீன்பிடி தொழிலாளி என்று தெரியவந்தது. அவர் நேற்று முன்தினம் (4-ம் தேதி) அதே பகுதி காஞ்சாம்புறம் பகுதியில் உள்ள சதிஷ் என்பவரின் ஸ்கூட்டரை திருடி கொண்டு சென்றதும் தெரிய வந்துள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து சுனிலை கைது செய்தனர்.














