நித்திரவிளை அருகே பூத்துறை மீனவ கிராமத்தினருக்கும் இரையுமன்துறை கிராமத்தினருக்கும் பிரச்சனை இருந்து வருகிறது. இதனால் கடல் அலை தடுப்பு சுவருக்கு பெரிய கல் கொண்டு செல்வது தொடர்பாக அடிக்கடி சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் இரு கிராமத்தை பிரிக்கும் வகையில் நடப்பட்டிருந்த எல்லைக்கல்லை காணவில்லை என்று பூத்துறை மீனவ கிராம மக்கள் கூட்டம் கூட்டிய நிலையில், நேற்று (15-ம் தேதி) பிற்பகல் பூத்துறை பங்கு நிர்வாகத்தினர் ஏற்கனவே கல் நின்றதாக கூறப்பட்ட பகுதியில் ஒரு எல்லை கல்லை கொண்டு நிறுவ முயன்றனர். இது குறித்த தகவல் அறிந்ததும் இரையுமன்துறை கிராம மக்கள் அப்பகுதியில் திரண்டனர். இதையடுத்து மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
நித்திரவிளை போலீசார் இருதரப்பையும் அங்கிருந்து கலைந்து போக வைத்தனர். தொடர்ந்து பங்கு நிர்வாகத்தினர், பொதுமக்கள் உட்பட 20 பேர் மீது வழக்கு பதிவு செய்து, நடவடிக்கைக்கு பத்மநாதபுரம் சப் கலெக்டருக்கு போலீசார் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.