நித்திரவிளை அருகே உள்ள காஞ்சாம்புரம் பகுதியை சேர்ந்த வேதராஜ் (69). இவர் முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி இறந்து விட்டார். ஒரு மகன் மற்றும் மகள் உண்டு. அவர்கள் கவனிக்கவில்லை என்று இவர் நாகர்கோவில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் தங்கி இருந்துள்ளார்.
கடந்த நான்காம் தேதி காஞ்சாம்புறத்தில் உள்ள கடை வராந்தாவில் படுத்து கிடந்துள்ளார். இதை பார்த்த கொல்லங்கோடு நகராட்சி கவுன்சிலர்கள் ஆல்பர்ட், ஜெபசிங் ஆகியோர் ஒரு ஆட்டோவில் ஏற்றி நித்திரவிளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் உதவியுடன் நடைக்காவில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் ஒப்படைத்தனர். அங்கு தங்கி இருந்த வேதராஜன் நேற்று மாலை இறந்தார். இந்த தகவலை கவுன்சிலர்கள் பிள்ளைகளை தெரிவித்துள்ளனர். அவர்கள் உடலை வாங்கி செல்ல யாரும் முன் வரவில்லை. வேதராஜ் இறந்த இடம் கொல்லங்கோடு போலீஸ் எல்லையானதால், கொல்லங்கோட்டில் புகார் அளித்து உறவினர்களிடம் ஒப்படைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்














