நித்திரவிளை: கல்லூரி மாணவர்கள் குளத்தில் தூய்மைப் பணி

0
249

நித்திரவிளை அருகேயுள்ள ஆலங்கோடு வலியகுளம் 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. வாவறை ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் அமைந்துள்ள இக்குளம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்குளத்தை மக்கள் குளிப்பதற்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்தி வந்தனர். இக்குளத்தில் அண்மைக்காலங்களில் பாசிகள் நிறைந்து தண்ணீர் துர்நாற்றம் வீசி வருவதுடன் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. 

இந்த நிலையில் பராமரிப்பின்றி காணப்படும் இக்குளத்தை மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், ஆலங்கோடு டிஒய்எப்ஐ பகத்சிங் படிப்பகம் இணைந்து தூய்மைப் பணி மேற்கொண்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மார்த்தாண்டம் கல்லூரி என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளர்கள் ஜேம்ஸ் பால், மேபல் கிறிஸ்டல் ராணி, காட்வின் மற்றும் படிப்பக செயலர் விக்டர், பொருளாளர் ரவி, வாவறை ஊராட்சி செயலர் கெமி மற்றும் என்எஸ்எஸ் மாணவர்கள், படிப்பக நிர்வாகிகள், வாவறை ஊராட்சி தூய்மைப் பணியாளர்கள் இணைந்து குளத்தில் இருந்து பாசிகளை அகற்றி குளத்தை தூய்மைப்படுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here