Home கன்னியாகுமரி செய்திகள் நித்திரவிளை:  அரசுபஸ் கல் வீசி உடைப்பு – போலீஸ் விசாரணை

நித்திரவிளை:  அரசுபஸ் கல் வீசி உடைப்பு – போலீஸ் விசாரணை

0

கொல்லங்கோட்டில் இருந்து மார்த்தாண்டத்துக்கு நேற்று(செப்.5) மாலையில் ஒரு அரசு பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. அந்த பஸ் வாவறை என்ற பகுதியில் சென்றபோது சாலையோரம் நின்ற ஒரு மர்ம நபர் பஸ்மீது கல் வீசினார். இதில் பஸ்ஸின் இடது பக்கவாட்டு கண்ணாடி உடைந்தது.

பஸ்ஸை டிரைவர் நிறுத்தி பார்த்த போது அந்த நபர் அங்கிருந்து வேகமாக தப்பி ஓடினார். பஸ்ஸின் கண்ணாடி உடைந்த பகுதியில் பயணிகள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இது சம்பந்தமாக டிரைவர் ஜான்ரோஸ் என்பர் நித்திரவிளை போலீசருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்தில் சென்று விசாரணை நடத்தி, கண்ணாடி உடைத்த மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version