நித்திரவிளை அருகே இரவிபுத்தன் துறை செயிண்ட் ஜோசப் காலனி பகுதியை சேர்ந்தவர் பவுலி (55). இவரது கணவர் ஜான்ரோஸ் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர் தனது இரண்டு மகள்களுடன் நேற்று காலை 8 மணி அளவில் வீட்டின் உள்ளே இருக்கும்போது, வீட்டின் அருகே நிற்கும் மின் கம்பம் இரண்டாக உடைந்து பவுலின் வீட்டின் மேல் விழுந்து உள்ளது.
அதிர்ஷ்டவசமாக மின்கம்பம் உடைந்து விழுந்த போது மின்சாரம் இல்லாத காரணத்தால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. சம்பவம் அறிந்து நம்பாளி மின் அலுவலக ஊழியர்கள் புதிய மின் கம்பம் நட்டு மின்பாதையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.