நித்திரவிளை அருகே தூத்தூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (46). பழக்கடை நடத்தி வருகிறார். இவர் மீன்பிடி தொழிலுக்கு செல்லும் மீனவர்களுக்கு குட்கா விற்பனை செய்வதாக நித்திரவிளை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று (நவ.,11) மாலை சதீஷ்குமார் பழக்கடையை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு விற்பனைக்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 75 பாக்கெட் குட்கா புகையிலை பொருட்கள் போலீசார் பறிமுதல் செய்து சதீஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.