Home கன்னியாகுமரி செய்திகள் நித்திரவிளை:  வீடு புகுந்து பெண்ணை தாக்கிய வாலிபர் கைது

நித்திரவிளை:  வீடு புகுந்து பெண்ணை தாக்கிய வாலிபர் கைது

0

நித்திரவிளை அருகே பூத்துறை கிறிஸ்துநகர் பகுதியை சார்ந்தவர் ஆண்டனி. மீன்பிடித் தொழிலாளி. இவரது மனைவி ரதி (40). நேற்று முன்தினம் மதியம் 2 மணி அளவில் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த ஜாண்மனு (34) என்பவர் ரதியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, ரதியைக் கையைப் பிடித்து இழுத்து கீழே தள்ளிப் போட்டுள்ளார். 

ரதி சத்தம் போட்டுள்ளார். இதில் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அந்த பகுதியில் கிடந்த கம்பியை எடுத்து ரதியைப் பார்த்து கொலை மிரட்டல் விடுத்து விட்டு ஜாண்மனு தப்பிச் சென்றுள்ளார். இதுசம்பந்தமாக ரதி கொடுத்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜாண்மனுவைக் கைது செய்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version