நாகர்கோவிலில் தனியார் வங்கி ஒன்றில் 40 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் பெற்று, பணம் செலுத்தாததால் வங்கி நிர்வாகத்தால் ஜப்தி செய்யப்பட்ட வீட்டை, அதன் உரிமையாளர் ஜெயபிரகாஷ் மற்றும் அவரது மனைவி பிரிஜில் மேரி ஆகியோர் பூட்டை உடைத்து நேற்று உள்ளே நுழைந்தனர். இது குறித்து வங்கி உதவி மேலாளர் ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் கணவன் மனைவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














