தீவிரவாதிகள் ஊடுருவல் வழக்கு தொடர்பாக ஜம்முவில் 9 இடங்களில் என்ஐஏ சோதனை

0
176

தீவிரவாதிகள் ஊடுருவல் வழக்குகள் தொடர்பாக ஜம்மு பிராந்தியத்தில் 9 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானிய தீவிரவாதிகள் ஊடுருவல் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, அவற்றை என்ஐஏ விசாரித்து வருகிறது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக ஜம்மு பிராந்தியத்தில் ரியாசி, உதம்பூர், ராம்பன், தோடா, கிஸ்துவார் உள்ளிட்ட 9 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

இந்த நடவடிக்கையில் என்ஐஏ அதிகாரிகளுக்கு மாநில காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் உதவினர். தீவிரவாதிகள் ஊடுருவலுடன் தொடர்புடைய நெட்வொர்க்கை அகற்றுவதில் கவனம் செலுத்தப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here