பாஜக தேசிய செயல் தலைவராக நிதின் நபின் பொறுப்பேற்றார்

0
16

பிஹார் மாநில அமைச்​ச​ராக உள்ள நிதின் நபின் (45), பாஜக​வின் தேசிய செயல் தலை​வ​ராக நேற்று முன்​தினம் நியமிக்​கப்​பட்​டார்.

இந்த தகவலை பாஜக தேசிய பொதுச் செய​லா​ளர் அருண் சிங் தெரி​வித்​திருந்​தார். இவர் ஜே.பி.நட்​டாவுக்கு அடுத்​த​படி​யாக தேசிய தலை​வ​ராக நியமிக்​கப்​படலாம் என கூறப்​படு​கிறது.

இந்​நிலை​யில், நிதின் நபின் பாட்​னா​விலிருந்து நேற்று மதி​யம் டெல்லி இந்​தி​ரா​காந்தி சர்​வ​தேச விமான நிலை​யம் வந்​தார். அங்கு அவரை டெல்லி முதல்​வர் ரேகா குப்தா உள்​ளிட்ட கட்சி நிர்​வாகி​கள் வரவேற்​றனர். பின்​னர் டெல்​லி​யில் உள்ள பாஜக தலை​மையகத்​தில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் அக்​கட்​சி​யின் தேசிய செயல் தலை​வ​ராக நிதின் நபின் பொறுப்​பேற்​றுக் கொண்​டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here