பஹல்காம் தீவிரவாத தாக்குதல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது என்ஐஏ

0
15

ஜம்மு காஷ்மீரின் பஹல்​காமில் தீவிர​வா​தி​களால் 26 பேர் கொல்​லப்​பட்ட சம்​பவம் தொடர்​பான வழக்​கில் ஜம்​மு​வில் உள்ள சிறப்பு நீதி​மன்​றத்​தில் தேசிய புல​னாய்வு முகமை (என்​ஐஏ) நேற்று குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​தது.

ஜம்மு காஷ்மீரின் அனந்​த​நாக் மாவட்​டம் பஹல்​காமில் கடந்த ஏப்​ரல் 22-ம் தேதி பாகிஸ்​தான் தீவிர​வா​தி​கள் நடத்​திய கொடூர தாக்​குதலில் 26 பேர் உயி​ரிழந்​தனர்.

இந்த தாக்​குதலில் 3 தீவிர​வா​தி​களுக்கு நேரடித் தொடர்பு இருப்​பது என்ஐஏ விசா​ரணை​யில் தெரிய​வந்​தது. இந்த மூவரும் கடந்த ஜூலை 28-ம் தேதி, நகரின் புறநகரில் ‘ஆபரேஷன் மகாதேவ்’ என்ற பெயரில் நடந்த என்​க​வுன்ட்​டரில் கொல்​லப்​பட்​டனர்.

முன்​ன​தாக இவர்​களுக்கு அடைக்​கலம் கொடுத்த பட்​கோட்டைச் சேர்ந்த பர்​வேஸ் அகமது ஜோதர், பஹல்​காமை சேர்ந்த பஷீர் அகமது ஜோதர் ஆகிய இரு​வரை என்ஐஏ கடந்த ஜூன் மாதம் கைது செய்​தது.

தாக்​குதல் நடத்​திய 3 தீவிர​வா​தி​களும் தடை செய்​யப்​பட்ட லஷ்கர்​-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த பாகிஸ்​தானியர்​கள் என்​பதை கைது செய்​யப்​பட்ட இரு​வரும் அடை​யாளம் காட்​டினர்.

இவர்​கள் தீவிர​வா​தி​களுக்கு உணவு, தங்​குமிடம் மற்​றும் தளவாட உதவி​களை வழங்​கிய​தாக என்ஐஏ அதி​காரி​கள் தெரி​வித்​தனர். இந்​நிலை​யில் இந்த வழக்​கில் லஷ்கர்​-இ-தொய்​பா, அதன் துணை அமைப்​பான தி ரெசிஸ்​டன்ஸ் ஃபிரண்ட் உட்பட ஏழு பேர் மீது ஜம்​மு​வில் உள்ள சிறப்பு நீதி​மன்​றத்​தில் என்ஐஏ நேற்று குற்​றப் பத்​திரிகை தாக்​கல் செய்​தது.

பாகிஸ்​தானின் சதித்​திட்​டம், குற்​றம் சாட்​டப்​பட்​ட​வர்​களின் பங்கு மற்​றும் வழக்​கில் உள்ள ஆதா​ரங்​களை குற்​றப்​பத்​திரிக்கை விவரிக்​கிறது.

1,597 பக்கங்கள்: 1,597 பக்க குற்​றப்​பத்​திரி​கை​யில் லஷ்கர் கமாண்​டர் சஜித் ஜாட் முக்​கிய சதி​யாள​ராக குறிப்​பிடப்​பட்​டுள்​ளது. தாக்​குதலை நடத்​திய ஜிப்​ரான், சுலை​மான், ஹம்சா ஆப்​கன் ஆகிய 3 தீவிர​வா​தி​களின் பெயர்​கள் குற்​றப்​பத்​திரி​கை​யில் இடம்​பெற்​றுள்​ளன. இந்த ஒட்​டுமொத்த தீவிர​வாத சதித்​திட்​டத்​தில் உள்​ளூர் ஆதரவு முக்​கியப் பங்கு வகித்​ததை குற்​றப்​பத்​திரி​கை ​விவரிக்​கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here