சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து நியூஸிலாந்து வீரர் டக் பிரேஸ்வெல் ஓய்வு

0
20

சர்​வ​தேச கிரிக்​கெட் போட்​டிகளில் இருந்து ஓய்வு பெறு​வ​தாக நியூஸிலாந்து அணி​யின் முன்​னாள் ஆல்​-ர​வுண்​டர் டக் பிரேஸ்​வெல் அறி​வித்​துள்​ளார்.

நியூஸிலாந்து அணிக்​காக 2011-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை டக் பிரேஸ்​வெல் விளை​யாடி​யுள்​ளார். 28 டெஸ்ட் போட்டிகளில் விளை​யாடி​யுள்ள அவர் 74 விக்​கெட்​களைக் கைப்பற்​றி​யுள்​ளார். மேலும் பேட்​டிங்​கில், 568 ரன்​களும் எடுத்துள்ளார்.

21 ஒரு​நாள் போட்​டிகளில் விளை​யாடி​யுள்ள அவர் 26 விக்​கெட்​களும் சர்​வ​தேச டி20 போட்​டிகளில் 20 விக்​கெட்​டு​கள் என சர்வதேச போட்​டிகளில் மொத்​தம் 120 விக்​கெட்​களைக் கைப்பற்றி​யுள்​ளார். பேட்​டிங்​கில் மொத்​தம் 915 ரன்​களைக் குவித்துள்​ளார்.

2023-ம் ஆண்​டுக்​குப் பிறகு இவர் நியூஸிலாந்து அணிக்​காக விளை​யாட​வில்​லை. விலா எலும்​பில் ஏற்​பட்ட காயம் காரண​மாக அவர் அதன் பிறகு டெஸ்ட் போட்​டிகளில் பங்​கேற்​க​வில்​லை. இந்நிலை​யில்​ தான் 35 வயதாகும் பிரேஸ்​வெல் நேற்று தனது ஓய்வு முடிவை அறி​வித்​துள்​ளார்.

அனைத்து வித​மான கிரிக்​கெட் போட்​டிகளில் இருந்​தும் ஓய்வு பெறு​வ​தாக அவர் அறி​வித்​துள்​ளார். ஓய்வு முடிவை அறிவித்துள்ளடக் பிரேஸ்​வெல்​லுக்கு நியூஸிலாந்து கிரிக்​கெட் வாரி​யம் வாழ்த்​துகளை தெரி​வித்​துள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here