கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சந்திப்பு நிலையம் அருகே ரயில் வரும் தண்டவாளப் பகுதியில் புதிதாக ஒரு தண்டவாளம் அமைப்பது குறித்து ரயில்வே அதிகாரிகள் நேற்று (பிப்.6) ஆய்வு நடத்தினர். தற்போது 2 தண்டவாளங்கள் வந்து கொண்டிருக்கின்ற நிலையில், அதில் ஒரு தண்டவாளத்தை தள்ளி வைத்துவிட்டு நடுவில் புதிதாக தண்டவாளம் அமைப்பது குறித்து அவர்கள் ஆய்வு செய்தனர். திருவனந்தபுரம் ரயில் பாதையில் இது அமைக்கப்பட உள்ளது.














