வடசென்னை பகுதியில் ரூ.50 கோடியில் புதிய திட்டப் பணிகள்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

0
26

வடசென்னை பகு​தி​யில் ரூ.50 கோடி மதிப்​பீட்​டிலான புதிய திட்ட பணி​களுக்​கு, முதல்​வர் மு.க.ஸ்டா​லின் அடிக்​கல் நாட்​டி​னார்.

வடசென்னை வளர்ச்​சித் திட்​டத்​தின் கீழ் சென்​னைப் பெருநகர் வளர்ச்​சிக் குழு​மம் சார்​பில், வால்​டாக்ஸ் சாலை, தண்​ணீர்​தொட்டி தெரு​வில் ரூ.179.04 கோடி செல​வில் கட்​டப்​பட்​டுள்ள முதல்​வர் நகர்ப்​புற குடி​யிருப்​பு​கள், முதல்​வர் திருமண மாளி​கை, மாநக​ராட்சி அச்​சகம், முதல்​வர் விளை​யாட்​டுத் திடல், ரத்த சுத்​தி​கரிப்பு நிலை​யம் மற்​றும் மறு​வாழ்வு மையம், பெருங்​களத்​தூரில் ரூ.4.73 கோடி செல​வில் மேம்​படுத்​தப்​பட்ட டாக்​டர் ஏ.பி.ஜெ. அப்​துல் கலாம் பூங்கா மற்​றும் நல்ல தண்​ணீர் குளம் ஆகிய​வற்றை முதல்​வர் மு.க.ஸ்டா​லின் நேற்று திறந்து வைத்​தார்.

சமு​தாய நலக்​கூடம்

மேலும், ரூ.3.35 கோடி மதிப்​பீட்​டில் வால்​டாக்ஸ் சாலை நகர்ப்​புற குடி​யிருப்பு வளாகத்​தில் கட்​டப்​பட​வுள்ள புதிய பல்​நோக்கு மையம், பெரம்​பூர் பேரக்ஸ் சாலை​யில் ரூ.14.76 கோடி மதிப்​பீட்​டில் புதிய சமு​தாய நலக்​கூடம், வியாசர்​பாடி, கக்​கன்ஜி நகரில் ரூ.10.42 கோடி மதிப்​பீட்​டில் புதிய சமு​தாய நலக்​கூடம், தண்​டை​யார்​பேட்​டை​யில் ரூ.16.32 கோடி மதிப்​பீட்​டில் புதிய சமு​தாய நலக்​கூடம் மற்​றும் வெங்​க​டாபுரம், தெற்கு பூங்கா தெரு​வில் அமைந்​துள்ள முழுநேர கிளை நூல​கத்​தில் ரூ.6.16 கோடி மதிப்​பீட்​டில் கட்​டப்​பட​வுள்ள முதல்​வர் படைப்​பகம் மற்​றும் நவீன நூல​கம் என, மொத்​தம் ரூ.51 கோடி மதிப்​பீட்​டிலான 5 புதிய திட்​டப் பணி​களுக்கு முதல்​வர் அடிக்​கல் நாட்​டி​னார்.

இந்​நிகழ்ச்​சி​யில், அமைச்​சர்​கள் தா.மோ.அன்​பரசன், மா.சுப்​பிரமணி​யன், பி.கே. சேகர்​பாபு, மேயர் ஆர்​.பிரி​யா, துணை மேயர் மு. மகேஷ் குமார், வீட்​டு​வசதி மற்​றும் நகர்ப்​புற வளர்ச்​சித் துறை செயலர் காகர்லா உஷா, சென்​னைப் பெருநகர் வளர்ச்​சிக் குழும உறுப்​பினர் செயலர் கோ.பிர​காஷ், முதன்மை செயல் அலு​வலர் சந்​திர சேகர் சாகமூரி, மாநக​ராட்சி ஆணை​யர் ஜெ.குமரகுருபரன், துணை ஆணை​யர் கட்டா ரவி தேஜா, தமிழ்​நாடு நகர்ப்​புற வாழ்​விட மேம்​பாட்டு வாரிய மேலாண் இயக்​குநர்​ ஸ்ரே​யா பி. சிங்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here