நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சிலுக்கு 23 பேர் கொண்ட புதிய குழு அமைப்பு

0
85

உணவுத்துறை அமைச்சர் தலைமையிலான மாநில நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சிலை சீரமைத்து 23 உறுப்பினர்களுடனான புதிய பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசிதழில் உணவுத்துறை செயலர் சத்யபிரத சாஹூ வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறியிருப்பதாவது: உணவுத்துறை அமைச்சர் தலைமையிலான இந்த கவுன்சிலில், வேலூர் எம்.பி. கதிர்ஆனந்த், தஞ்சாவூர் எம்.பி., எஸ்.முரசொலி, தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூர் சிவா, உணவுப் பொருள் வழங்கல் ஆணையர், மாநில நுகர்வோர் குறைதீர் ஆணைய பதிவாளர், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழக தலைவர், இந்தியன் ஆயில் நிறுவன மாநில ஒருங்கிணைப்பாளர், மாநில அளவிலான வங்கியாளர் குழுவின் உதவி பொதுமேலாளர், பிஐஎஸ் தென் மண்டல துணை இயக்குநர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தவிர தமிழ்நாடு உணவு பாதுகாப்பு ஆணையர், ஈரோடு நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர், கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர், சென்னை அம்பத்தூர் இந்திய நுகர்வோர் விழிப்புணர்வு சங்க தலைவர், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள நுகர்வோர் ஆராய்ச்சி கல்வி அமைப்பின் தலைவர், விழுப்புரம் மாவட்டம் நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்க தலைவர், காவிரி டெல்டா விவசாயிகள் குழுவின் வி.சத்திய நாராயணன், மெட்ராஸ் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர், தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க தலைவர், சிஏஜி அமைப்பின் தலைவர், எத்திராஜ் மகளிர் கல்லூரியி்ன் முதல்வர் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். உணவுத்துறையின் செயலர் உறுப்பினர் செயலராக இருப்பார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here