Home உலக செய்திகள் பெருவெள்ள பாதிப்புக்கு இந்தியா, சீனா, அமெரிக்கா இழப்பீடு வழங்க நேபாள அரசு வலியுறுத்தல்

பெருவெள்ள பாதிப்புக்கு இந்தியா, சீனா, அமெரிக்கா இழப்பீடு வழங்க நேபாள அரசு வலியுறுத்தல்

0

நே​பாளத்​தில் ஏற்​பட்ட பெரு​வெள்ள பாதிப்​புக்கு இந்தியா, சீனா மற்​றும் அமெரிக்கா ஆகிய நாடு​கள் இழப்​பீடு வழங்க வேண்​டும் என நேபாள அரசு வலி​யுறுத்தி உள்​ளது.

திபெத்​-நே​பாள எல்​லை​யில் கடந்த மாதம் 26-ம் தேதி பனிப்​பாறை உடைந்​ததன் விளை​வாக நேபாளத்​தின் போடே கோசி, திரிசூலி ஆகிய ஆறுகளில் வெள்​ளம் பெருக்​கெடுத்​து, பெரும் பேரழிவை ஏற்​படுத்​தி​யது.

உயிரிழப்பு 1,100-ஐ தாண்டியது

இது​வரை 1,100-க்​கும் அதி​க​மானோர் உயி​ரிழந்​துள்ள நிலை​யில், சுமார் 4,800 பேரின் கதி என்ன என்​பது இன்​னும் தெரிய​வில்​லை. இந்​நிலை​யில், திடீர் திருப்​ப​மாக நிதி​யுதவி கேட்​ப​தற்கு பதிலாக நீதி மற்​றும் இழப்​பீடு கோர நேபாள அரசு முடிவு செய்​துள்​ளது. அதி​லும் குறிப்​பாக இந்​தப் பெரு​வெள்ள பாதிப்​புக்கு இந்​தி​யா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடு​கள் தார்​மீக பொறுப்​பேற்று இழப்​பீடு வழங்க வேண்​டும் என அந்​நாடு வலி​யுறுத்தி உள்​ளது.

இதுகுறித்து நேபாள வெளி​யுறவு அமைச்​சர் சிஷிர் கனால் கூறும்​போது, “ரசுவா பேரழி​வை, நன்​கொடைகள் தேவைப்​படும் ஒரு மனி​தாபி​மான அவசரநிலை​யாக மட்​டும் கருதக்​கூ​டாது. இது முக்​கிய தொழில்​மய​மான பொருளா​தார நாடு​களால் வெளி​யிடப்​படும் கரியமில வாயு​வால் நிகழ்ந்த பேரழி​வாகும். இது நிதி​யுதவி சார்ந்த விஷயமல்ல.

இது சட்ட மற்​றும் தார்​மீகப் பொறுப்பு சம்​பந்​தப்​பட்ட விஷ​யம். தற்​போது உலகில் அதிக அளவில் கரியமில வாயுவை உமிழ்ந்து வரும் மூன்று நாடு​களான இந்​தி​யா, அமெரிக்கா மற்​றும் சீனா​ ஆகியவை நேபாளத்​துக்கு இழப்​பீடு வழங்க வேண்​டிய பொறுப்பு உள்​ளது” என்​றார்.

ஐ.நா.வில் நேபாள பிரதமர்

நேபாள அரசு அவசர நிதி​யுதவிக்​காக ஐ.நா. ஆதரவு பெற்ற ‘இழப்பு மற்​றும் சேதங்​களுக்​குப் பதிலளிப்​ப​தற்​கான நிதி​யத்​தை’ முறைப்​படி அணுகி​யுள்​ளது. மேலும், இந்​தப் பேரிடரை​யும், பருவநிலை நீதிக்​கான தனது கோரிக்​கை​யை​யும் சர்​வ​தேச மன்றங்​களில் எழுப்ப அரசு தயா​ராகி வரு​வ​தாக தகவல்​கள் தெரிவிக்​கின்​றன.

இதன்​படி, அமெரிக்​கா​வின் நியூ​யார்க்​கில் செப்.8-ம் தேதி தொடங்கும் 81-வது ஐ.நா. பொதுசபை கூட்​டத்​தில் நேபாள பிரதமர் பாலேந்​திர ஷா கலந்​து​கொண்​டு, இந்​தக்​ கோரிக்​கை​யை முன்​வைக்​க இருப்​ப​தாக கூறப்​படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version