திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலையில் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய புதிய கற்கால கற்கருவிகள் கண்டெடுப்பு

0
15

திருப்பத்தூர் மாவட்டம் வாணி​யம்​பாடி இஸ்​லாமியா கல்​லூரி வரலாற்​றுத் துறை ஆய்வு நெறி​யாளர் சி.​முகமது ஃபஹீம் மேற்​பார்​வை​யின் கீழ் முனை​வர் பட்ட ஆய்​வாளர் ரங்​க​நாதன், ஜவ்​வாது மலைக்கு உட்​பட்ட நெல்​லிப்​பட்டு கிராமத்​தில் 5,000 ஆண்​டு​களுக்கு முந்​தைய கற்​கால கற்​கருவி​களை கண்​டெடுத்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் ‘இந்து தமிழ் திசை’ செய்​தி​யாளரிடம் கூறிய​தாவது: நெல்​லிப்​பட்டு கிராமத்​தைச் சேர்ந்த கார்த்​தி​கேயன், கிரீஸ்​வரன் ஆகியோர் அளித்த தகவலின்​படி, அங்கு ஆசிரிய​ராகப் பணி​யாற்​றும் கோவிந்​த​ராஜ் மற்​றும் சதீஷ்கு​மார் ஆகியோரது நிலங்​களில் 7-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் அரிய கற்​கருவி​களை கண்​டெடுத்​துள்​ளோம். இவை புதிய கற்​கால மனிதர்​களின் தேவை​களை​யும், தொழில்​நுட்​பத் திறன்​களை​யும் வெளிப்​படுத்​துகின்​றன.

இங்கு கண்​டெடுக்​கப்​பட்ட கற்​கோ​டாரி நீள​மான, ஒரு​முனை கூர்​மை​யான, நுட்​ப​மாக மெரு​கூட்​டப்​பட்​ட​தாக உள்​ளது. காடு​களை அழித்து விவ​சாய நிலங்​களை உரு​வாக்​கு​வதற்​கும், மரங்​களை வெட்டி வீடு​களை உரு​வாக்​கு​வதற்​கும் இவை பயன்​பட்​டிருக்​கும். இங்கு அதிக எண்​ணிக்​கை​யில் கற்​கோ​டாரி​கள் கண்​டெடுக்​கப்​பட்​டுள்​ள​தால், இவை அன்​றாடப் பயன்​பாட்​டுக் கருவி​களாக மட்​டுமின்​றி, வர்த்​தகத்​தின் ஒரு பகு​தி​யாக​வும் இருந்​திருக்​கலாம் என்று தெரி​கிறது.

கற்​கோ​டாரி​களின் ஒரே மாதிரி​யான வடிவ​மைப்பு மற்​றும் நுட்​ப​மான மெரு​கூட்​டல் ஆகிய​வை, ஜவ்​வாது மலைப்​பகு​தி​யின் புதிய கற்​கால மனிதர்​களின் தேவையை மட்​டுமின்​றி, தரமான கைவினைத் திறன் மற்​றும் சமூக கட்​டமைப்பை வெளிப்​படுத்​துகின்​றன. இந்​தப் பகுதி ஒரு காலத்​தில் தன்​னாட்சி பெற்ற, விவ​சா​யம் மற்​றும் வர்த்​தகத்​தில் ஈடு​பட்​டிருந்த நாகரிக மைய​மாக இருந்​திருக்​கும். ஜவ்​வாது மலை​யின் வரலாற்​றில் இது திருப்​பு​முனைக் கண்​டு​பிடிப்​பாகும்.

இவற்​றின் முக்​கி​யத்​து​வத்​தைக் கருத்​தில்​கொண்​டு, தொல்​லியல் துறை​யினர் விரி​வான ஆய்​வு​களை மேற்​கொள்ள வேண்​டும். அதே​போல, இந்​தக் கருவி​களை ஆய்​வுக்கு உட்​படுத்​து​வதன் மூலம், இவற்​றின் மூலப் பொருட்​களை​யும், தமிழகத்​தின் மற்ற புதிய கற்​காலக் குடியேற்​றங்​களு​டன் கொண்​டிருந்த வர்த்தக உறவு​களை​யும் அறிய​லாம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here