நெல்லை பிரண்ட்ஸ் கிளப் சார்பில் சென்னையில் மார்ச் 7-ல் மாநில வாலிபால் போட்டி

0
14

நெல்லை பிரண்ட்ஸ் கிளப் சார்​பில் அண்ணாச்சி பி.ஜான் மற்​றும் ஏ.கே.சித்​திரை​பாண்​டியன் நினைவு மாநில அளவி​லான வாலிபால் போட்டி சென்னை எழும்​பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்​டரங்​கில் வரும் 7-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடை​பெறுகிறது.

இதில் ஆடவர் பிரி​வில் சென்னை எஸ்​ஆர்​எம், கோவை கற்பகம் பல்​கலைக்​கழகம், சென்னை டி.ஜி.வைஷ்ணவா கல்​லூரி, திருச்சி ஜமால் முகமது கல்​லூரி, சென்னை பனிமலர் பொறி​யியல் கல்​லூரி, சென்னை லயோலா கல்லூரி, சென்னை ஜேப்​பி​யார் கல்​லூரி, சென்னை நியூ கல்​லூரி ஆகிய 8 அணி​கள் கலந்து கொள்​கின்​றன.

மகளிர் பிரி​வில் சென்னை ஐசிஎஃப், எஸ்​ஆர்​எம், டாக்​டர் சிவந்தி கிளப், தமிழ்​நாடு காவல்​துறை அணி, எஸ்​டிஏடி அணி ஆகிய 5 அணி​கள் பங்​கேற்​கின்​றன. போட்​டிகள் லீக் மற்​றும் நாக் அவுட் முறை​யில் நடை​பெறுகின்றன. அனைத்து போட்​டிகளும் மாலை 5 மணிக்கு தொடங்​கும்.

இந்​தத் தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ.4 லட்​சம் ஆகும். ஆடவர் பிரி​வில் சாம்​பியன் பட்​டம் வெல்​லும் அணிக்கு ஏ.கே.சித்​திரை​பாண்​டியன் நினைவு கோப்பையும் பரிசுத் தொகை​யும் வழங்​கப்​படும். மகளிர் பிரி​வில் பட்​டம் வெல்​லும் அணிக்கு பி.ஜான் நினைவு கோப்​பை​யும், பரிசுத் தொகை​யும் வழங்​கப்​படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here