உலகம் முழுவதும் அதிகம் வசூலித்த திரைப்படங்களாக ஒவ்வொரு வருடமும் ஹாலிவுட் படங்களே முதலில் இருக்கும். ஆனால், 2025-ம் ஆண்டு அதிகம் வசூல் அள்ளிய திரைப்படமாக, ‘நே ஜா 2’ (Ne Zha 2) என்ற அனிமேஷன் திரைப்படம் முதலிடம் பிடித்துள்ளது.
சீனாவில் உருவான இந்தக் கற்பனை சாகசப் படம் இந்த ஆண்டு ஜன. 29-ல் வெளியானது. அப்போதிருந்தே பாக்ஸ் ஆபீஸில் சாதனைகளைப் படைத்து வருகிறது. இப்படம் உலகளவில் 2.2 பில்லியன் டாலருக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.18,000 கோடி.
ரூ.700 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் இவ்வளவு கோடியை வசூலித்திருப்பது உலக சினிமா வல்லுநர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இதுவரை வெளியான அனிமேஷன் படங்களில் அதிக வசூல் ஈட்டிய படமாக இது மாறியுள்ளது. 2 பில்லியன் டாலர் என்ற மைல் கல்லைத் தாண்டிய, ஆங்கிலம் அல்லாத முதல் அனிமேஷன் படம் இது. அதிகம் வசூல் செய்த அடுத்த திரைப்படமும் அனிமேஷன் தான். ‘சூடோ பியா 2’ திரைப்படம் சுமார் 1.5 பில்லியன் டாலர் வசூலுடன் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.







