தேசிய விளையாட்டு போட்டி: தங்கம் வென்றார் வித்யா ராம்ராஜ்

0
351

38-வது தேசிய விளையாட்டு போட்டி உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று மகளிருக்கான உயரம் தாண்டுதலில் ஹரியானாவின் பூஜா 1.84 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். தமிழகத்தின் கோபிகா (1.79) வெள்ளிப் பதக்கமும், கர்நாடகாவின் அபினயா ஷெட்டி (1.77) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

மகளிருக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழகத்தின் வித்யா ராம்ராஜ் பந்தய தூரத்தை 58.11 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு தமிழக வீராங்கனையான ஸ்ரீவர்த்தணி (59.86) வெள்ளிப் பதக்கமும், மகாராஷ்டிராவின் நேஹா தபாலே (1:00.52) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here