“மம்மூட்டிக்கு கொடுக்கும் அளவுக்கு தேசிய விருதுகள் தகுதியானவை அல்ல” – பிரகாஷ் ராஜ் சாடல்

0
15

55வது கேரள மாநில அரசின் திரைப்பட விருதுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. இதில் மம்மூட்டிக்கு ‘பிரம்மயுகம்’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது.

விருதுக்குழு தலைவரான நடிகர் பிரகாஷ்ராஜ் இந்த நிகழ்வில் பேசும்போது தேசிய விருதுகளை கடுமையாக சாடினார். அவர் பேசியதாவது: “தேசிய திரைப்பட விருதுகள் சமரசம் செய்யப்பட்டவை என்று சொல்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. கேரளாவில் ஒரு ஜூரி தலைவராக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், ஏனென்றால் அவர்கள் என்னை அழைத்தபோது, ​​எங்களுக்கு அனுபவம் வாய்ந்த ஒரு வெளிநபர் தேவை என்றும், உங்கள் முடிவுகளில் எப்போதும் நாங்கள் தலையிடமாட்டோம் என்றும் சொன்னார்கள்.

தேசிய விருதுகளில் அது நடப்பதில்லை, ‘ஃபைல்’களும் குப்பைகளும் விருதுகளைப் பெறும்போது நாம் அதைப் பார்க்கிறோம். அத்தகைய அரசும் நடுவர் மன்றமும் இருந்தால், அந்த தேசிய விருதுகள் மம்மூட்டிக்கு கொடுக்கும் அளவுக்கு தகுதியானவை அல்ல” இவ்வாறு பிரகாஷ்ராஜ் தெரிவித்தார்.

பிரகாஷ் ராஜ் தலைமையிலான நடுவர் குழுவில், இயக்குநர் ரஞ்சன் பிரமோத், திரைப்பட தயாரிப்பாளர் ஜிபு ஜேக்கப், திரைக்கதை எழுத்தாளர் சந்தோஷ் எச்சிக்கானம், பின்னணி பாடகி காயத்ரி அசோகன், ஒலி வடிவமைப்பாளர் மற்றும் இயக்குனர் நிதின் லுகோஸ் மற்றும் நடிகர், எழுத்தாளர் மற்றும் டப்பிங் கலைஞர் பாக்யலக்ஷ்மி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here