நாமக்கல் சிறுநீரக திருட்டு புகார் எதிரொலி: உடல் உறுப்பு மாற்று ஒப்புதல் குழுவை கலைக்க தமிழக அரசு முடிவு

0
98

நாமக்​கல் சிறுநீரக திருட்டு புகாரையடுத்​து, தற்​போதுள்ள உடல் உறுப்பு மாற்று ஒப்​புதல் குழுவை கலைத்​து​விட்​டு, புதிய குழு அமைக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ள​தாக உயர் நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு சார்​பில் தெரிவிக்​கப்​பட்​டது. பரமக்​குடியைச் சேர்ந்த சத்​தீஸ்​வரன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: நாமக்​கல் மாவட்​டம் பள்​ளிப்​பாளை​யத்​தில் விசைத்​தறித் தொழிலா​ளர்​கள், ஏழை தொழிலா​ளர்​களின் சிறுநீரகங்கள் திருடப்பட்டுள்ளன.

இருப்​பினும் சிறுநீரகத் திருட்டு தொடர்​பாக தமிழக அரசு இது​வரை எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை. இந்த விவ​காரத்​தில் அரசி​யல் கட்​சி​யினருக்கு தொடர்​புள்​ளது. இதனால் மாநில போலீ​ஸார் விசா​ரித்​தால் உண்மை வெளிவ​ராது. எனவே, சிறுநீரக திருட்டு தொடர்​பாக சிபிஐ விசா​ரணைக்கு மாற்றி உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது.

இந்த மனு, நீதிப​தி​கள் எஸ்​.எம்​.சுப்​பிரமணி​யம், ஜி.அருள் முரு​கன் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. ஊரக சுகா​தா​ரச் சேவை​கள் இயக்​குநர் பதில் மனு தாக்​கல் செய்​தார். அதில், “சிறுநீரகத் திருட்டு தொடர்​பாக தமிழ்​நாடு சுகா​தார சேவைத் திட்ட இயக்​குநர் வினித் தலை​மையி​லான குழு விசா​ரணை நடத்​தி​யது. பெரம்​பலூர் தனலட்​சுமி னி​வாசன் மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை மற்​றும் திருச்சி கேத்​தார் மருத்​து​வ​மனை​யின் உரிமம் ரத்து செய்​யப்​பட்​டுள்​ளது. இது தொடர்​பாக ஆனந்​தன், ஸ்டான்லி மோகன் ஆகிய இரு தரகர்​கள் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

இந்​தச் சம்​பவத்​தையடுத்து உறுப்பு மாற்று அறுவை சிகிச்​சைக்கு ஒப்​புதல் வழங்​கும் ஒப்​புதல் குழு இனிவரும் காலங்​களில் முறை​யாக வீடியோ பதிவு செய்​ய​வும், முறை​கேட்​டில் தொடர்​புடைய அலு​வலர்​கள் மீது துறை ரீதி​யான நடவடிக்கை எடுக்​க​வும் பரிந்​துரை செய்​யப்பட்​டுள்​ளது. தற்​போதுள்ள உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஒப்​புதல் குழு கலைக்​கப்​பட்டு புதிய குழு அமைக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது” என தெரிவிக்​கப்​பட்​டது.

இதையடுத்து நீதிப​தி​கள், “சிறுநீரகத் திருட்டு குற்​றச்​சாட்டை முறை​யாக விசா​ரிக்க வேண்​டும். சட்​ட​விரோத​மாக உடல் உறுப்​பு​களை விற்​பனை செய்​வது தண்​டனைக்​குரிய குற்​றம்” என்று தெரி​வித்​தனர். தனி​யார் மருத்​து​வ​மனை சார்​பில் ஆஜரான வழக்​கறிஞர், “உடல் உறுப்பு விற்​பனை​யில் மருத்​து​வ​மனை​யின் பங்கு இல்​லை. உடல் உறுப்பு தானத்​துக்கு ஒப்​புதல் வழங்​கும் குழு அனு​மதி வழங்​கி​னால் மட்​டுமே உடல் உறுப்பு தான அறுவை சிகிச்சை நடை​பெறுகிறது” என்​றார்.

பின்​னர் நீதிப​தி​கள், “மருத்​து​வ​மனை நிர்​வாகத்​துக்கு தொடர்பு இல்லை என்​பதை ஏற்க முடி​யாது. மருத்​து​வ​மனை நியமிக்​கும் மருத்​து​வர்​கள்​தான் அறுவை சிகிச்சை மேற்​கொள்​கின்​றனர். ஒவ்​வொரு மருத்​து​வ​மனை​யும் சிறப்​பாக சிகிச்சை அளிப்​ப​தாக​வும், சிறப்பு மருத்​துவ நிபுணர்​கள் பணி​யில் இருப்​ப​தாக​வும் விளம்​பரம் செய்​கிறது. அதை நம்பி சிகிச்​சைக்கு வரும் நோயாளி​களுக்கு ஏதாவது நடந்​தால் அதற்கு அங்கு பணிபுரி​யும் மருத்​து​வர்​கள்​தான் பொறுப்​பு.

எனவே, அனைத்​துக் கோணத்​தி​லும் விசா​ரணை நடத்த வேண்​டும். பாதிக்​கப்​பட்​டோர் அளித்த புகாரின் பேரில் விசா​ரணை நடத்​தி, முகாந்​திரம் இருக்​கும் நிலை​யில் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை​யைத் தொடர வேண்​டும். விசா​ரணை ஆக. 25-க்கு தள்​ளிவைக்​கப்​படு​கிறது” என உத்​தர​விட்​டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here