ரயில்வேயில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களுக்கான கிளைத்தேர்தல் கடந்த மூன்று நாளாக நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இந்த தேர்தலில் SRMU, DREU, DRKS, SRES ஆகிய தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளன. மொத்தம் உள்ள 1120 வாக்காளர்களில் நேற்றுடன் (டிசம்பர் 6) முடிந்த வாக்குப்பதிவில் மொத்தம் 912 பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்திருந்தனர். வாக்குப் பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு திருவனந்தபுரம் கொண்டு செல்லப்பட்டன.














