நாகர்கோவிலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற ரோடு ஷோ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது, இடலாக்குடி பட்டாரியார் நெடுந்தெருவைச் சேர்ந்த ஓவியர் சந்தியாதேவி, தான் வரைந்த பிரதமர் மோடியின் உருவப்படத்தை பரிசாக வழங்கினார். பாதுகாப்பு அதிகாரிகள் அதை மோடியிடம் கொண்டு சேர்த்தனர். படத்தை வாங்கிப் பார்த்த பிரதமர், அதன் பின்புறம் கையெழுத்திட்டு, மீண்டும் ஓவியரிடம் ஒப்படைத்தார். சந்தியா தேவி அதை பத்திரமாக வீட்டிற்கு எடுத்துச் சென்றார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
