சா​தி​வாரி கணக்​கெடுப்பு நடத்​த ​கோரி மார்ச் 16-ல் நாம் தமிழர் கட்சி பேரணி

0
176

சாதி​வாரி கணக்​கெடுப்பை நடத்​தக்​கோரி வரும் மார்ச் 16-ம் தேதி நாம் தமிழர் கட்சி சார்​பில் பேரணி செங்​கல்​பட்டு மாவட்​டத்​தில் நடை​பெற உள்​ளது.

இதுதொடர்​பாக அக்​கட்சி தலை​மையகம் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறியிருப்பதாவது: தமிழகத்​தில் சாதி​வாரி கணக்​கெடுப்பை உடனடி​யாக நடத்​தி, உண்​மை​யான சமூகநீ​தியை நிலை​நாட்ட வேண்​டும்.

பஞ்​சமி நிலங்​களை மீட்க வேண்​டும் உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்​பில் பேரணி மற்​றும் பொதுக்​கூட்​டம் வரும் மார்ச் 16-ம் தேதி மாலை 4 மணிக்கு திருப்​போரூரில் நடை​பெறவுள்​ளது.

திருப்​போரூர் அம்​பேத்​கர் சிலை அருகே தொடங்​கும் இந்த பேரணியை நாம் தமிழர் கட்​சி​யுடன் கொங்கு மக்​கள் முன்​னணி, தமிழ்​நாடு நாடார் சங்​கம், இந்​திய தேசிய லீக் கட்​சி, புரட்​சித் தமிழகம் – பறையர் பேர​வை, சிறு​பான்மை மக்​கள் நலக்கட்​சி, தமிழர் மீட்​புக்​களம், தமிழர் தேசம் கட்சி ஆகிய​வற்​றின் தலை​வர்​களும் பங்​கேற்று நடத்​தவுள்​ளனர். நாதக தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான்தலைமை வகிக்​க​வுள்​ளார் என்று கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here