கன்னியாகுமரி மாவட்ட மாவட்ட எஸ். பி சுந்தரவதனம் தலைமையில், நாகர்கோவிலில் நேற்று (நவம்பர் 22) மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய எஸ். பி சுந்தரவதனம், போக்சோ புகார்களுக்கு தாமதமின்றி உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதை உறுதி செய்ய வேண்டும். திருட்டுப் பொருட்களை மீட்க நடவடிக்கை எடுப்பதுடன் நீதிமன்ற பிடி ஆணையை நிறைவேற்ற தீவிரம் காட்ட வேண்டும் என்றார்.














