புனே பேஷ்வா கோட்டையில் முஸ்லிம் பெண்கள் தொழுகை: கோமியம் தெளித்து இந்துத்துவாவினர் போராட்டம்

0
17

மகாராஷ்டிர மாநிலம் புனே​வின் சனி​வார் வாடா​வில் வரலாற்று சிறப்​புமிக்க பேஷ்​வா​வின் கோட்டை அமைந்​துள்​ளது. இதனுள் முஸ்​லிம் பெண்​கள் தொழுகை நடத்​தும் வீடியோ கடந்த ஞாயிறு அன்று வெளி​யானது.

புனே​வின் பாஜக மாநிலங்​களவை உறுப்​பினர் மேதா குல்​கர்னி தனது சமூக ஊடகப் பக்​கத்​தில் இந்த வீடியோவை பதிவேற்​றம் செய்​திருந்​தார். வரலாற்று பாரம்​பரி​யம் அவம​திக்​கப்​பட்டு விட்​ட​தாக​வும் குறிப்​பிட்​டு, போராட்​டங்​களுக்கு அழைப்பு விடுத்​தார்.

சனி​வார் வாடா வளாகத்​தின், பிரார்த்​தனை தளத்​தில் கோமி​யம் மற்​றும் பசுஞ் சாணம் தெளித்து புனிதப்​படுத்த அவர் அழைப்பு விடுத்​தார். அவர் இந்​துத்​து​வா​வினருடன் இணைந்து தீவிரப் போராட்​டத்​தில் இறங்​கி​னார். குல்​கர்னி தலை​மையி​லான இப்​போ​ராட்​டத்​தில் பல்​வேறு இந்து அமைப்​பினர் நூற்​றுக்​கணக்​கானோர் பங்​கேற்​றனர். அவர்​கள் கோமி​யம் தெளித்​து, சிவபெரு​மானுக்கு பிரார்த்​தனை செய்​து, பிரார்த்​தனைப் பகு​தியை புனிதப்​படுத்​தினர். ‘சனி​வார் வாடா இந்​துக்​களு​டையது, அது பேஷ்​வாக்​களின் பெரு​மை’ என கோஷங்​களை எழுப்​பினர்.

சனி​வார் வாடாவுக்கு வெளியே அமைந்​துள்ள ஹஸ்​ரத் காஜா சையத் தர்கா அருகே இந்​துத்​து​வா​வினர் போராட்​டம் நடத்த முயன்​றனர். போலீ​சார் தடியடி நடத்தி போராட்​ட​காரர்​களை விரட்ட முயன்​றனர்.

இதுகுறித்து புனே காவல்​துறை துணை ஆணை​யர் கிருஷ்ணகேஷ் ராவலே கூறும்​போது, ‘சனி​வார் வாடா மகா​ராஷ்டி​ரா​வின் வரலாற்​றுச் சின்​னம். எந்த மதத்​தின் மத நிகழ்​வு​களும் இங்கு நடத்​தப்​படக்​கூ​டாது. சனிவர் வாடா இந்​திய தொல்​பொருள் ஆய்​வுத் துறை​யின் பாது​காப்​பில் உள்​ளது. எனவே, அத்​துறை​யுடன் ஆலோ​சித்த பிறகு மேல் நடவடிக்கை எடுக்​கப்​படும்’ எனத் தெரி​வித்​தார்.

பாஜக எம்பி குல்​கர்​னி​யின் நடவடிக்​கை​யை, மகராஷ்டி​ரா​வின் எதிர்க்​கட்​சிகள் கடுமை​யாக கண்​டித்​துள்​ளன. துணை முதல்​வ​ரான அஜீத்​ப​வாரின் தேசி​ய​வாதக் காங்​கிரஸ் கட்​சி, குல்​கர்னி மீது வழக்கு பதிவு செய்ய வலி​யுறுத்​தி​யது.

இந்​து-​முஸ்​லீம் இடையே பதற்​றத்​தைத் குல்​கர்னி தூண்டி வரு​கிறார் என என்​சிபி தலை​வர் ரூபாலி தோம்​பரே தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here