இசையமைப்பாளர் சங்​கீத ராஜன் கால​மா​னார்

0
18

நடிகர் தியாக​ராஜன் எழு​தி, இயக்​கிய ‘பூவுக்​குள் பூகம்​பம்’ படம் மூலம் இசையமைப்​பாள​ராக அறி​முக​மானவர் எஸ்.பி. வெங்​கடேஷ் என்​கிற சங்​கீத ராஜன் ​(70).

சேலம் விஷ்ணு, காவல் பூனை​கள், வடக்​கு​வாசல், என் கணவர், ஏர்​போர்ட், சினேகி​தி, முனி முதல் பாகம், பாட்​டாளி மகன் உள்பட தமிழ், தெலுங்​கு, கன்​னடம், பெங்​காலி, ஒரி​யா, போஜ்புரி, மலை​யாளம் உள்​ளிட்ட மொழிகளில் பல படங்​களுக்கு இசையமைத்​தவர் இவர்.

பல திரைப்​படங்​களுக்கு பின்​னணி இசையமைத்​துள்​ளார்.ஒரு வருட​மாக நுரை​யீரல் பிரச்​சினைக்​குச் சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று காலை கால​மா​னார். அவரது இறு​திச்​சடங்​கு, போரூர் மயானத்​தில் இன்று நடை​பெறுகிறது. அவர் மறைவுக்கு திரைத்​துறை​யினர் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர். மறைந்த சங்​கீத ராஜனுக்கு கோபால், சுகு​மார்​ என்​ற மகன்​களும்​ ஒரு மகளும் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here