ஃபேன்​டஸி காமெடி கதையில் முனீஸ்காந்த்

0
18

அறி​முக இயக்​குநர் அசோக் ராம் இயக்​கத்​தில் முனீஸ்காந்த் நடிக்​கும் படத்தை ஜே.பி. சினி​மாஸ் சார்​பில் ஜெயக்​கு​மார், ப்ரீத்தி தயாரிக்​கின்​றனர்.

பழமை​யான கேமரா ஒன்றை மையப்​படுத்தி தயா​ராகும் ஃபேன்​டஸி காமெடி படமான இதில், ரெடின் கிங்​ஸ்​லி, பாலாஜி சக்​திவேல், விவேக் பிரசன்​னா, கல்​கி, ஜென்​சன் திவாகர், வினோத் முன்​னா, அனன்யா ராவ் உள்​ளிட்ட பலர் நடிக்​கின்​றனர்.

ஸ்ரீதர் சுப்​பிரமணி ஒளிப்​ப​திவு செய்​யும் இந்​தப்​படத்​துக்கு ஆனந்த் காசி​நாத் இசையமைக்​கிறார். இதன் தொடக்க விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. இயக்​குநர் நித்​திலன் சுவாமி​நாதன் கலந்து கொண்டு படக் குழு​வினரை வாழ்த்​தி​னார்.

படம் பற்றி அசோக் ராம் கூறும்​போது, “ஃபேன்​டஸி காமெடி படமான இதற்​காக சென்​னை​யில் பிரம்​மாண்​ட​மான அரங்​கம் அமைத்​துள்​ளோம். அதில் இப்​போது படப்​பிடிப்பு நடந்து வரு​கிறது. அனை​வரும் ரசிக்​கும்​படி​யான படமாக இது இருக்​கும்” என்​றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here