2024-25-ல் அதிக ரத்தம் சேகரிப்பு: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

0
66

சென்ற 2024-25-ம் நிதி​யாண்​டில் தேவையை விட அதிக ரத்​தம் சேகரிக்​கப்​பட்​ட​தாக நாடாளு​மன்​றத்​தில் மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து மாநிலங்​களவை​யில் மத்​திய சுகா​தா​ரத் துறை இணை​யமைச்​சர் பிர​தாப் ராவ் ஜாதவ் எழுத்​து​மூலம் அளித்த பதிலில் கூறி​யிருப்​ப​தாவது: 2024-25-ம் ஆண்​டில், இந்​தியா 1,46,01,147 யூனிட் ரத்​தத்தை சேகரித்​தது. இது ஆண்​டுத் தேவை​யான 14.6 மில்​லியன் யூனிட்​களை விட அதி​க​மாகும். மேலும் 2023-ம் ஆண்​டில் சேகரிக்​கப்​பட்ட 1,26,95,363 யூனிட் ரத்​தத்தை விட 15% அதி​க​மாகும்.

இந்​தி​யா​வில் தாமாக முன்​வந்து அளிக்​கப்​படும் ரத்த தானம் சுமார் 70% ஆக உள்​ளது. மீத​முள்ள ரத்த தான​மானது நோயாளிக்கு குடும்ப உறுப்​பினர்​கள் அல்​லது நண்​பர்​கள் தான​மாக அளிப்​ப​தன் மூலம் பெறப்​படு​கிறது. இவ்​வாறு அமைச்​சர் தனது பதிலில்​ கூறி​யுள்​ளார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here