குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து திங்கள் சந்தை பஸ் நிலையம் முன்பு நேற்று (19-ம் தேதி) மாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி. உதயம் தலைமை வகித்தார். திங்கள் நகர் பேரூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெமினிஷ், வேணுகோபால் முன்னிலை வகித்தனர். காங்கிரஸ் பேச்சாளர் அந்தோணி முத்து கண்டன உரையாற்றினார்.
பிரின்ஸ் எம்.எல்.ஏ சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது “நாட்டை பாதுகாக்கும் இலாகாவை வைத்திருப்பவரே நாட்டை அழிக்க பார்க்கிறார். காங்கிரஸ் பேரியக்கம் ஆட்சியில் இருந்தபோது ஒருபோதும் ஜனநாயகத்திற்கு துரோகம் செய்ததில்லை” என கூறினார். ஆர்ப்பாட்டத்தின் போது ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை பதவி விலக வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.














