தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க எல்லையில் அகழி

0
240

தீவிரவாதிகள் சுரங்கம் தோண்டி ஊடுருவதை தடுப்பதற்காக ஜம்முவில் சர்வதேச எல்லை நெடுகிலும் 25 கி.மீ. தொலைவுக்கு எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) அகழி தோண்டியுள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடைசியாக கடந்த 2022-ல் எல்லையில் ஊடுருவல் சுரங்கப் பாதையை பிஎஸ்எப் கண்டறிந்தது.

ஜம்முவில் அமைதி நிலவிய பல பகுதிகளில் கடந்த ஆண்டு தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன. இதையடுத்து டெல்லியில் நடைபெற்ற பல ஆலோசனை கூட்டங்களுக்கு பிறகு எல்லையில் ஊடுருவல் சுரங்கப் பாதையை கண்டறிய அகழி தோண்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தலுக்கு சுமார் 2 மாதங்களுக்கு முன், ஜம்மு, சம்பா மற்றும் கதுவா சர்வதேச எல்லையில் அகழி தோண்ட 33 கி.மீ. பகுதியை பிஎஎஸ் அடையாளம் கண்டது. 4 அடி முதல் 10 அடி ஆழம் வரை மொத்தம் 25 கி.மீ. நீளத்துக்கு இதுவரை அகழி அமைத்துள்ளது. அடுத்த 2 மாதங்களில் எஞ்சிய 8 கி.மீ. அகழி அமைக்கப்படும்.

ஊடுருவலுக்கு அதிக வாய்ப்புள்ள இடங்களில் குறிப்பாக அடந்த வனப் பகுதிகளில் மாநில காவல் துறை மற்றும் மத்திய ஆயுதப் படைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறு ராணுவம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஒரு கூட்டத்தில், ஜம்முவில் ஊடுருவல் பகுதிகளை கண்டறியுமாறு பிஎஸ்எப் கேட்டுக்கொள்ளப்பட்டது. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here