உள்நாட்டு நிறுவனமான சோஹோ ‘ஆபிஸ் சூட்’ ஆன்லைன் தளத்தில் உள்ள மென்பொருட்களை அலுவலக பயன்பாட்டுக்கு பயன்படுத்தும்படி மத்திய கல்வி அமைச்சகம் சமீபத்தில் உயர் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியது.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது இ-மெயில் முகவரியை சோஹோ மெயிலுக்கு மாற்றியுள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள தகவலில், ‘‘நான் சோஹோ மெயிலுக்கு மாறிவிட்டேன். என்னுடைய இ-மெயில் முகவரி மாறியுள்ளதை குறித்துக் கொள்ளுங்கள். எனது புதிய இ-மெயில் முகவரி amitshah.bjp@zohomail.in. எனக்கு மெயில் அனுப்புபவர்கள், இனிமேல் இந்த இ-மெயில் முகவரியை பயன்படுத்தவும்’’ என குறிப்பிட்டுள்ளார்.
முடிவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வழக்கமாக குறிப்பிடுவதுபோல், ‘‘இந்த விஷயத்தில் உங்களின் கனிவான கவனத்துக்கு நன்றி’’ என குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீதர் வேம்புவின் சோஹோ நிறுவனத்தின் ‘அரட்டை’ செய லிக்கு மக்களிடையே வரவேற்பு அமோகமாக உள்ளது. தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா ‘அரட்டை’ செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். இதற்கு தர் வேம்பும் நன்றி தெரிவித்திருந்தார். தற்போது சோஹோ நிறுவனத்தின் ஆன்லைன் தளத்தில் உள்ள மென்பொருட்களை மத்திய அரசே பயன்படுத்த தொடங்கியுள்ளது. உள்நாட்டு நிறுவனம் என்பதால், நமது தரவுகள் பாதுகாக்கப்படும் என உறுதியும் அளிக்கப்பட்டுள்ளது.