ஏஐ தொழில்நுட்பத்தில் உருவான மீலாதுன் நபி

0
14

முஹம்மது நபிகளின் வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம், ‘மீலாதுன் நபி’. சிங்கப்பூர் எழுத்தாளர் மில்லத் அகமது இதன் பாடல்கள், திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, தயாரித்துள்ளார். இது முற்றிலும் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள ஆவணத் திரைப்படம் ஆகும்.

படம் பற்றி தயாரிப்பாளரும், இயக்குநருமான மில்லத் அகமது கூறும்போது, “திருக்குர்ஆன், ஹதிஸ் ஆகியவற்றின் ஆதாரத்துடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணாவர்கள், இளையர்கள், நபிகளின் வாழ்க்கையைப் பற்றி அறிய விரும்பும் ஆர்வலர்கள் அனைவரும் அவசியம் காண வேண்டிய படம். இதன் கதை மூன்று கோணங்களில் சொல்லப்படுகிறது.

ஏஐ கதாபாத்திரங்கள் மூலமும், சென்னையில் புகழ்பெற்ற இமாம்கள் அப்துல் கையூம், உமர் ரிழ்வான், சதக்கத்துல்லா மூலமும், பத்து பாடல்கள் மூலமும் கதை நகர்கிறது. இதிலுள்ள பாடல்களை நாகூர் ஹனிபா மகன் நவுஷாத் ஹனிபா, ஜென்டில்மேன் சம்சுதீன், யூடியூப் புகழ் ரஹீமா பேகம், விஜய் சூப்பர் சிங்கர் பரிதா பாடியுள்ளனர். எஸ்.ஆர்.ராம் இசையமைத்துள்ளார். லலித் ராகவேந்தர், மில்லத் அகமது ஒளிப்பதிவு செய்துள்ளனர். அக்.10-ல் வெளியிட முயற்சித்து வருகிறோம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here