கிள்ளியூர் வட்டம், மிடாலம் அருகே உள்ள உதய மார்த்தாண்டம் பகுதியில் அருள்மிகு சுயம்பு நாகலிங்கேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இது மிகவும் பழமையான கோயில் ஆகும். இந்த கோயிலில் தொல்லியல் ஆர்வலர் கொட்டாரம் சுந்தர் மற்றும் தொல்லியல் ஆய்வாளர் ஞாலம், முனைவர் மதன்குமார் ஆகியோர் இணைந்து நேரில் ஆய்வு செய்தனர்.
அப்போது கோயில் அருகில் அமைந்துள்ள சிதிலமடைந்த கல் மண்டபத்தில் வட்டெழுத்துக்கள் பொறிக்கப்பட்ட இதுவரை ஆவணம் செய்யப்படாத புதிய இரண்டு கல்வெட்டுகளை கண்டெடுத்துள்ளார்கள். இதனை முறையாக படியெடுத்து உலகத் தமிழ்ஆய்வு நிறுவனத்திற்கு தபால் மூலம் அனுப்பியுள்ளார்கள்.














