மாடு வளர்ப்பை முறைப்படுத்த மைக்ரோசிப் பொருத்தம்: மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம்

0
41

​சென்னை மாநக​ராட்சி மாமன்ற கூட்​டம், மேயர் பிரியா தலை​மை​யில், துணை மேயர் மகேஷ்கு​மார், ஆணை​யர் ஜெ.குமரகுருபரன் முன்​னிலை​யில் ரிப்​பன் மாளி​கை​யில் நேற்று நடைபெற்​றது.

இக்​கூட்​டத்​தில் பேசிய பாஜக கவுன்​சிலர் உமா ஆனந்த், “எனது வார்​டில் நான் கொடுத்த வாக்​குறு​தி​களில் 80 சதவீதம் நிறைவேற்​றி​விட்​டேன். எதிர்க்​கட்சி வார்டு என்​றும் பாராமல், திட்​டங்​களை செயல்​படுத்த உதவி​யாக இருந்த முதல்​வர் ஸ்டா​லின், அமைச்​சர்​கள் கே.என்​.நேரு, மா.சுப்​பிரமணி​யன் ஆகியோ​ருக்கு நன்றி” என்​றார்.

சென்​னை​யில் 22,875 மாடுகள் உரிமை​யாளர்​களால் வளர்க்​கப்​படு​கின்​றன. இந்த மாடுகள் பொது​மக்​களுக்கு இடையூறாக சாலை​யில் சுற்றிதிரிவதை தடுக்க ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்​கப்​பட்​டது. கடந்த 2 ஆண்​டு​களில் 4237 மாடுகள் பிடிக்​கப்​பட்​டு, ரூ.2.22 கோடி அபராதம் வசூலிக்​கப்​பட்​டது. மாநக​ராட்சி சார்​பில், 17 இடங்​களில் மாட்டு கொட்​டகைகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

இதை​யும் மீறி, சாலை​யில் மாடுகள் திரிவதை தடுக்​க​வும், மாடுகள் வளர்ப்பை முறைப்​படுத்​த​வும், இந்த மாடுகளை வளர்க்க அதன் உரிமை​யாளர்​களுக்கு உரிமம் வழங்​க​வும், அப்​போது, மாடுகளுக்கு மைக்​ரோசிப் பொருத்​த​வும், அதற்​காக 25 ஆயிரம் மைக்​ரோசிப்​கள் மற்​றும் சிப் ரீடர்​கள் வாங்​க​வும், உரிமம்பெற்​று, மைக்​ரோசிப் பொருத்த மார்ச் 18 வரை அவகாசம் வழங்​க​வும் மாமன்​றத்​தில் அனு​மதி அளித்​து, தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது.

மாநக​ராட்​சி​யின் திரு​வொற்​றியூர் மண்​டலம், 12-வது வார்​டு, பால​கிருஷ்ணா காலனி 3-வது தெரு​வுக்​கு, முன்​னாள் திரு​வொற்​றியூர் நகராட்சி தலை​வர் தி.வ.​விசுவ​நாதன் பெயரை சூட்​ட​வும், ஜான்ட்​ர​வர் தெரு​வுக்கு முன்​னாள் கவுன்​சிலர் க.வீ​ரா​சாமி பெயரை சூட்​ட​வும், ராமாவரத்​தில் அமைய இருக்​கும் பூங்கா​வுக்கு சுதந்​திரப் போராட்ட வீரர், தியாகி எஸ்​.எஸ்​.​விஸ்​வ​நாத​தாஸ் பெயரை சூட்​ட​வும் அனு​மதி அளிக்​கப்​பட்​டது.

மாநக​ராட்சி சேவை​களை ஒரே டிஜிட்​டல் தளத்​தில் ரூ.3.49 கோடி​யில் ஒருங்​கிணைக்​க​வும், கவுன்​சிலர் மேம்​பாட்டு நிதி​யில் சிசிடிவி கேம​ராக்​களை நிறு​வ​வும், புளியந்​தோப்பு இறைச்சி கூடத்​தில் கூடு​தல் பணி​களை ரூ.9.29 கோடி​யில் மேற்​கொள்​ள​வும் அனு​மதி அளிக்​கப்​பட்​டது. மொத்​தம்​ 118 தீர்​மானங்​கள்​ நேற்று நிறைவேற்​றப்​பட்​டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here