செல்வராகவன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் கதையின் நாயகனாக நடிக்கும் படம், ‘மெண்டல் மனதில்’. இதில் நாயகியாக மாதுரி ஜெயின் நடிக்கிறார். அருண் ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தை பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் ஜி.வி.பிரகாஷ் தயாரிக்கிறார்.
ரொமான்ஸ் படமாக உருவாகி வரும் இதன் பாடல்கள் குறித்து, ஜி.வி.பிரகாஷ் கூறும்போது, “இந்தப் படம் என் மனதுக்கு நெருக்கமான படம். இதில் இடம்பெறும் பாடல்கள் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். ரசிகர்களுக்கும் இது புதிய அனுபவமாக இருக்கும்” என்றார்.
இப்படத்தின் முதல் மூன்று கட்டப் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், தற்போது 4-வது கட்டப் படப்பிடிப்பு நடந்து வருகிறது. விரைவில் முதல் சிங்கிள், டீஸர் பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.