ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை: பாகிஸ்தானுக்கு பதிலாக ஓமன் அணி சேர்ப்பு

0
20

சர்வ​தேச ஹாக்கி சம்​மேளனத்​தின் 14-வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை தொடர் வரும் நவம்​பர் 28 முதல் டிசம்​பர் 10-ம் தேதி வரை சென்னை மற்​றும் மதுரை​யில் நடை​பெற உள்​ளது. இதில் போட்​டியை நடத்​தும் இந்​தியா உள்​ளிட்ட 24 அணி​கள் கலந்து கொள்​கின்​றன.

இந்த தொடரில் விளை​யாட தகுதி பெற்​றிருந்த பாகிஸ்​தான் அணி கடந்த வாரம் திடீரென வில​கியது. இதைடுத்து மாற்று அணி விரை​வில் அறிவிக்​கப்​படும் என சர்​வ​தேச ஹாக்கி சம்​மேளனம் அறி​வித்​திருந்​தது.

இந்​நிலை​யில் ஆடவர் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்​தான் அணிக்கு பதிலாக ஓமன் அணி சேர்க்​கப்​பட்​டுள்​ள​தாக சர்​வ​தேச ஹாக்கி சம்​மேளனம் நேற்று அதி​காரப்​பூர்​வ​மாக அறி​வித்​தது. இதையடுத்து இந்​தியா இடம் பெற்​றுள்ள ‘பி’ பிரி​வில் ஓமன் அணி சேர்க்​கப்​பட்​டுள்​ளது. இதே பிரி​வில் சிலி, சுவிட்​சர்​லாந்து ஆகிய அணி​களும்​ உள்​ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here