முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டி மேல்பாலை பள்ளி வெற்றி

0
231

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான போட்டிகள் நாகா்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கில் செவ்வாய்க்கிழமை தொடங்கின.

இதில், ஆண்களுக்கான கைப்பந்து போட்டி நாகா்கோவில் எஸ். எல். பி. அரசு மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய், புதன் ஆகிய 2 நாள்கள் நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலன் அலுவலா் ச. ராஜேஷ் தலைமையில், கைப்பந்து சங்க மாவட்டச் செயலா் வளா்அகிலன், வழக்குரைஞா் சிவராஜ் ஆகியோா் போட்டிகளை தொடக்கிவைத்தனா்.

இந்த போட்டிகளில் 25 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் மேல்பாலை புனிதமேரி மேல்நிலைப் பள்ளி அணி முதலிடமும், மணலிக்கரை புனித மேரிகொறட்டி பள்ளி அணி 2ஆம் இடமும், கன்னியாகுமரி அமிா்தா வித்யாலயா பள்ளி அணி 3ஆம் இடமும் பிடித்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here