மெல்பர்ன் டெஸ்ட் போட்டி: 175 ரன்கள் இலக்கை விரட்டும் இங்கிலாந்து

0
18

ஆஷஸ் கிரிக்​கெட் தொடரின் 4-வது டெஸ்ட் போட்​டி​யில் 175 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து அணி விரட்டுகிறது.

முதல் இன்​னிங்​ஸில் ஆஸ்​திரேலிய அணி 152 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. இதைத் தொடர்ந்து விளை​யாடிய இங்​கிலாந்து அணியை 110 ரன்​களுக்கு ஆஸ்​திரேலிய அணி சுருட்டி பதிலடி கொடுத்​துள்​ளது.

இங்​கிலாந்து அணி, ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து 5 போட்​டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளை​யாடி வரு​கிறது. முதல் 3 டெஸ்ட் போட்​டிகளில் ஆஸ்​திரேலிய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்​பற்றி விட்​டது.

இந்​நிலை​யில் இந்​தத் தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி மெல்​பர்ன் மைதானத்​தில் நேற்று காலை தொடங்​கியது. கிறிஸ்​து​மஸ் தினத்​துக்கு மறு​நாள் நடை​பெறும் போட்டி என்​ப​தால் இந்​தப் போட்டி பாக்​ஸிங் டே டெஸ்ட் போட்டி என்று அழைக்​கப்​படு​கிறது.

முதலில் விளை​யாடிய ஆஸ்​திரேலிய அணி, இங்​கிலாந்து வீரர்​கள் ஜோஷ் டங், கஸ் அட்​கின்​ஸன், பென் ஸ்டோக்​ஸ், பிரைடன் கார்ஸ் ஆகியோரது அபார பந்​து​வீச்​சால் 45.2 ஓவர்​களில் 152 ரன்​களுக்கே ஆட்​ட​மிழந்​தது.

ஆஸ்​திரேலிய அணி​யில் அதி​கபட்​ச​மாக மைக்​கேல் நேசர் மட்​டும் 49 பந்​துகளில் 35 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தார். டிரா​விஸ் ஹெட் 12, ஜேக் வெத​ரால்டு 10, மார்​னஸ் லபுஷேன் 6, கேப்​டன் ஸ்டீவன் ஸ்மித் 9, உஸ்​மான் கவாஜா 29, அலெக்ஸ் கேரி 20, கேமரூன் கிரீன் 17, ஸ்காட் போலண்ட் 0, மிட்​செல் ஸ்டார்க் 1 ரன் எடுத்து வீழ்ந்​தனர்.

ஜோஷ் டங் அபார​மாக பந்​து​வீசி 45 ரன்​கள் விட்​டுக்​கொடுத்து 5 விக்​கெட்​களைக் கைப்​பற்​றி​னார். கஸ் அட்​கின்​ஸன் 2, பிரைடன் கார்​ஸ், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்​கெட்டை வீழ்த்​தினர்.

இதைத் தொடர்ந்து இங்​கிலாந்து தனது முதல் இன்​னிங்ஸை தொடங்​கியது. பேட்​டிங்​கில் மோச​மாக செயல்​பட்ட ஆஸ்​திரேலிய அணி, பந்​து​வீச்​சில் பதிலடி கொடுத்து 29.5 ஓவர்​களில் இங்​கிலாந்து அணியை 110 ரன்​களில் சுருட்​டியது.

அந்த அணி​யின் நட்​சத்​திர ஆட்​டக்​காரர் ஹாரி புரூக் மட்​டும் 34 பந்​துகளில் 41 ரன்​கள் குவித்​தார். கேப்​டன் பென் ஸ்டோக்ஸ் 16, கஸ் அட்​கின்​ஸன் 28 ரன்​கள் சேர்த்​தனர். மற்ற வீரர்​கள் எவரும் ஒற்றை இலக்க ரன்​களைத் தாண்​ட​வில்​லை.

ஜாக் கிராவ்லி 5, பென் டக்​கெட் 2, ஜேக்​கப் பெத்​தேல் 1, ஜோ ரூட் 0, ஜேமி ஸ்மித் 2, வில் ஜேக்ஸ் 5, பிரைடன் கார்ஸ் 4, ஜோஷ் டங் ஒரு ரன் சேர்த்​தனர். ஆஸ்​திரேலிய அணி தரப்​பில் மைக்​கேல் நேசர் 4 விக்​கெட்​களைக் கைப்​பற்​றி​னார். ஸ்காட் போலண்ட் 3 விக்​கெட்​களை​யும், ஸ்டார்க் 2 விக்​கெட்​களை​யும் வீழ்த்​தினர்.

இதனால் ஆஸ்​திரேலிய அணி முதல் இன்​னிங்​ஸில் 42 ரன்​கள் முன்​னிலை பெற்​றது. இதைத் தொடர்ந்து தனது 2-வது இன்​னிங்ஸை தொடங்​கிய ஆஸ்​திரேலிய அணி விக்​கெட் இழப்​பின்றி 4 ரன்​கள் எடுத்​துளது. டிரா​விஸ் ஹெட் 0, ஸ்காட் போலண்ட் 3 ரன்​களு​டன் களத்​தில் உள்​ளனர். 46 ரன்​கள் முன்​னிலை​யுடன் இன்று 2-ம்​ நாள்​ ஆட்​டத்​தை ஆஸ்​திரேலிய அணி தொடங்கியது.

இன்று சீரான இடைவெளியில் ஆஸ்திரேலிய அணி விக்கெட்களை இழந்தது. 34.3 ஓவர்களில் 132 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் பிரைடன் கார்ஸ் 4, ஸ்டோக்ஸ் 3, டங் 2, அட்கின்சன் 1 விக்கெட் கைப்பற்றினர்.

இந்தப் போட்டியில் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இங்கிலாந்து அணி விரட்டுகிறது. அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்துள்ளது. கிராவ்ல் மற்றும் பெத்தேல் களத்தில் உள்ளனர். டக்கெட் மற்றும் பிரைடன் கார்ஸ் ஆகியோர் விக்கெட் இழந்தனர். இங்கிலாந்து அணியின் கைவசம் 8 விக்கெட் உள்ளது, அந்த அணியின் வெற்றிக்கு தேவையான ரன்கள் 98.

3 ஆயிரம் ரன்கள்: டெஸ்ட் போட்டிகளில் குறைந்த பந்துகளில் 3 ஆயிரம் ரன்களை வேகமாக எட்டியவர் என்ற சாதனையை இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் படைத்துள்ளார்.

நேற்றைய போட்டியின்போது அவர் இந்த சாதனையை எட்டினார். இதுவரை 34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி புரூக், தற்போது 3,034 ரன்களை 54.17 சராசரியுடன் எடுத்துள்ளார். இதில் 10 சதம், 14 அரை சதங்கள் அடங்கும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 317 ஆகும். இவர் 3,468 பந்துகளில் இந்த ரன்களை எட்டி அதிவேகமாக 3 ஆயிரம் டெஸ்ட் போட்டி ரன்களை எடுத்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

3 ஆயிரம் ரன்களை வேகமாக (குறைந்த பந்துகளில்) எட்டிய வீரர்கள் விவரம்:

1. ஹாரி புரூக் (இங்கிலாந்து) – 3,468 பந்துகள்

2. ஆடம் கில்கிறைஸ்ட் (ஆஸி) – 3,610 பந்துகள்.

3. டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) – 4,047 பந்துகள்.

4. ரிஷப் பந்த் (இந்தியா) – 4,095 பந்துகள்.

5. வீரேந்தர் சேவாக் (இந்தியா) – 4,129 பந்துகள்.

மெல்பர்னில் 5 விக்கெட்: நேற்றைய போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோஷ் டங் 5 விக்கெட்களைச் சாய்த்தார். இதன்மூலம் 21-ம் நூற்றாண்டில் மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் 5 விக்கெட்களைச் சாய்த்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை ஜோஷ் டங் படைத்தார். இதற்கு முன்பு 1998-ல் இங்கிலாந்து வீரர்கள் டேரன் காவ், டீன் ஹெட்லி ஆகியோர் தலா 5 விக்கெட்களை எடுத்து இந்த சாதனையை படைத்திருந்தனர்.

8 ஆயிரம் ரன்கள்: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 8 ஆயிரம் ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா சேர்ந்துள்ளார். நேற்றைய போட்டியில் அவர் 52 பந்துகளைச் சந்தித்து 29 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 136 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள அவர் மொத்தம் 8,001 ரன்களை எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 6,206 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 1,554 ரன்களும், சர்வதேச டி20 போட்டிகளில் 241 ரன்களையும் அவர் குவித்துள்ளார்.

அதிக கேட்ச்: இந்தப் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், ஒரு கேட்ச் பிடித்தார். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக கேட்ச்களை(மொத்தம் 214 கேட்ச்கள்) பிடித்த வீரர் என்ற சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார்.

இந்த வரிசையில் ஸ்டீவன் ஸ்மித் 211 கேட்ச்களுடன் 2-வது இடத்திலும், ராகுல் திராவிட் 210 கேட்ச்களுடன் 3-வது இடத்திலும், மஹேல ஜெயவர்த்தனே 205 கேட்ச்களுடன் 4-வது இடத்திலும், ஜேக்கஸ் காலிஸ் 200 கேட்ச்களுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here