நேபாளத்தை எளிதாக வீழ்த்தி சூப்பர் 8 சுற்றில் நுழைந்தது மே.இ.தீவுகள்: T20 WC 2026

0
20

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் நேற்று ‘சி’ பிரி​வில் மும்பை வான்​கடே மைதானத்​தில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் இரு முறை சாம்​பிய​னான மேற்கு இந்​தி​யத் தீவு​கள், நேபாள அணி​யுடன் மோதி​யது. முதலில் பேட் செய்த நேபாள அணி 20 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 133 ரன்​கள் எடுத்​தது. அதி​கபட்​ச​மாக தீபேந்​திர சிங் ஐரி 47 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் 58 ரன்​கள் சேர்த்​தார்.

சோம்​பால் கமி 26, லோகேஷ் பாம் 13, குல்​ஷன் ஜா 11, ஆசிப் ஷெய்க் 11 ரன்​கள் சேர்த்​தனர். மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி தரப்​பில் ஜேசன் ஹோல்​டர் 4 ஓவர்​களை வீசி 27 ரன்​களை விட்​டுக்​கொடுத்து 4 விக்​கெட்​களை வீழ்த்​தினர். அகீல் ஹோசைன், மேத்யூ ஃபோர்​டு, ஷமர் ஜோசப், ராஸ்​டன் சேஸ் ஆகியோர் தலா ஒரு விக்​கெட் கைப்​பற்​றினர்.

134 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 15.2 ஓவர்​களில் ஒரு விக்​கெட்டை மட்​டும் இழந்து 134 ரன்கள் குவித்து, 9 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. தனது 10-வது அரை சதத்தை கடந்த கேப்​டன் ஷாய் ஹோப் 44 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் 61 ரன்​களும், ஷிம்​ரன் ஹெட்​மயர் 32 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 46 ரன்​கள் விளாசினர். முன்​ன​தாக பிரண்​டன் கிங் 22 ரன்​களில் நந்​தன் யாதவ் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். ஷாய் ஹோப், ஷிம்​ரன் ஹெட்​மயர் ஜோடி 2-வது விக்​கெட்​டுக்கு 91 ரன்​கள் சேர்த்​தது.

மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு இது ஹாட்​ரிக் வெற்​றி​யாக அமைந்​தது. இதன் மூலம் 6 புள்​ளி​களு​டன் தனது பிரி​வில் முதல் இடம் பிடித்து சூப்​பர் 8 சுற்​றுக்கு முன்​னேறியது. ஆட்ட நாயக​னாக ஜேசன் ஹோல்​டர் தேர்​வா​னார். மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி தனது முதல் ஆட்​டத்​தில் 35 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் ஸ்காட்​லாந்​தை​யும், 2-வது ஆட்​டத்​தில் முன்​னாள் சாம்​பிய​னான இங்​கிலாந்தை 30 ரன்​கள் வித்​தி​யாசத்​தி​லும் வென்​றிருந்​தது. தனது கடைசி லீக் ஆட்​டத்​தில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி வரும் 19-ம் தேதி இத்​தாலி​யுடன் மோதுகிறது. இந்த ஆட்​டம் கொல்​கத்​தா​வில் நடை​பெறுகிறது.

நேபாள அணிக்கு இது ஹாட்​ரிக் தோல்​வி​யாக அமைந்​தது. இதன் மூலம் அந்த அணி சூப்​பர் 8 சுற்​றுக்கு முன்​னேறும் வாய்ப்பை இழந்​தது.

இன்றைய ஆட்டங்கள்:

  • ஆப்கானிஸ்தான் – ஐக்கிய அரபு அமீரகம் – இடம்: டெல்லி, நேரம்: காலை 11 மணி
  • இங்கிலாந்து – இத்தாலி – இடம்: கொல்கத்தா, நேரம்: பிற்பகல் 3 மணி
  • ஆஸ்திரேலியா – இலங்கை – இடம்: கண்டி, நேரம்: இரவு 7 மணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here