மாத்தூர் தொட்டி பாலம் ஆசியாவிலேயே மிகவும் உயரமான பாசன கால்வாய் பாலம் ஆகும். இந்த பாலத்தின் நுழைவாயில் பகுதியில் பாலம் உருவாக்க காரணமான அப்போதைய தமிழக முதலமைச்சர் காமராஜரின் உருவம் பதித்த அடிக்கல் நாட்டப்பட்டிருந்தது. இன்று காலை அந்த அடிக்கல் உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது.
விசாரணையில் யாரோ மர்ம நபர்கள் அடிக்கல்லை உடைத்ததாக தெரிய வந்தது. இது குறித்து திருவட்டாறு வட்டார வளர்ச்சி அலுவலர் புகாரின் பேரில் திருவாட்டாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல்வேறு தரப்பினர் கண்டன குரல்கள் எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால் சிங் தலைமையில், விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட் உள்ளிட்ட காங்கிரசார் இன்று திடீரென அப்பகுதியில் அடிக்கல்லை உடைத்த நபர்களை கைது செய்ய வேண்டும் என கேட்டு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து திருவட்டார் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.














