பாகிஸ்​தானுக்கு எதி​ரான போட்டி: இந்திய வீரர்​களுக்கு சச்​சின் அறி​வுரை | யு19 உலகக் கோப்பை

0
38

19 வயதுக்​குட்​பட்​டோருக்​கான உலகக் கோப்பை போட்​டி​யில் பங்​கேற்​கும் இந்​திய அணி வீரர்​களுக்கு கிரிக்​கெட் ஜாம்​ப​வான் சச்​சின் டெண்​டுல்​கர் அறி​வுரை வழங்​கி​னார்.

19 வயதுக்​குட்​பட்​டோருக்​கான உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்டி ஜிம்​பாப்​வே, நமீபியா நாடு​களில் நடை​பெற்று வரு​கிறது. இந்​தப் போட்​டி​யின் சூப்​பர் சிக்ஸ் லீக் ஆட்​டத்​தில் இன்று இந்​தி​யா, பாகிஸ்​தான் அணி​கள் மோதவுள்​ளன. இந்​தப் போட்​டி​யில் வெற்றி பெறும் அணி எளி​தாக உலகக் கோப்​பை​யின் அரை இறு​திக்கு முன்​னேறும். எனவே, இரு அணி​களுக்​கும் இது முக்​கிய​மான ஆட்​ட​மாக உள்​ளது.

இந்​நிலை​யில், ஜிம்​பாப்​வே​யில் உள்ள இந்​திய வீரர்​களுக்கு சில அறி​வுரைகளை சச்​சின் டெண்​டுல்​கர் நேற்று வழங்​கி​னார். காணொலி முறை​யில் ஜிம்​பாப்​வே​யில் உள்ள இந்​திய வீரர்​களு​டன் சச்​சின் டெண்​டுல்​கர் உரை​யாடி​னார். இதற்​கான ஏற்​பாடு​களை இந்​திய கிரிக்​கெட் கட்​டுப்​பாட்டு வாரி​யம் (பிசிசிஐ) செய்​திருந்​தது. அப்​போது சில பேட்​டிங் நுணுக்​கங்​களை​யும் சச்​சின் இந்திய வீரர்களுக்கு வழங்​கி​னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here